சட்டப்பேரவை எதிரே இருசக்கர வாகனங்கள் நிறுத்தத் தடை

புதுவை சட்டப்பேரவை எதிரே இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போலீஸார் தடை விதித்தனர்.


புதுவை சட்டப்பேரவை எதிரே இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போலீஸார் தடை விதித்தனர்.
புதுவை சட்டப்பேரவையின் நுழைவு வாயில் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்குத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இடத்தில் அண்மைக் காலமாக வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக 3 வரிசையில் சாலைகளை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
மேலும், சட்டப்பேரவை எதிரில் பாரதி பூங்கா செல்லும் சாலையிலும் வாகனங்களைக் குறுக்கும், நெடுகிலும் நிறுத்துகின்றனர். இதனால், சட்டப்பேரவைக்கு வரும் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளின் வாகனங்களை நிறுத்த மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
எனவே, சட்டப்பேரவை நுழைவு வாயில் பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீஸார் தடை விதித்தனர். இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அந்தப் பகுதியில் நோ பார்க்கிங்' என்ற தகவல் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவை எதிரே உள்ள சாலை, மக்கள் சென்று வர விசாலமாக உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: இந்தத் தடை உத்தரவு எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக் குறிதான். இதுபோன்ற உத்தரவுகளை உறுதியாகத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com