சுதந்திர தின விழாவையொட்டி முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர தின விழாவையொட்டி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழா நாடு

சுதந்திர தின விழாவையொட்டி, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினவிழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தினவிழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக் கொடியேற்றி வைத்து, பல்வேறு அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், சுதந்திர தினவிழாவையொட்டி, புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, எல்லைப் பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் நாராயணசாமியின் வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பைப் பலப்படுத்த முடிவு செய்தனர். இதற்காக புதுச்சேரி கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் மாறன், சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் ரங்கநாதன், சிக்மா காவல் கண்காணிப்பாளர் ஜித்தா கோதண்டராமன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை முதல்வர் வீட்டின் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்துவது, வெளி நபர்களை அனுமதிக்கத் தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தற்போது, முதல்வர் நாராயணசாமி வீட்டில் 20 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com