தொ.மு.ச.வில் இணைந்த சாலைப் போக்குவரத்து ஊழியர்கள்

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 35 பேர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் (தொமுச) சனிக்கிழமை இணைந்தனர்.

புதுவை அரசின் சாலைப் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 35 பேர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் (தொமுச) சனிக்கிழமை இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சி புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பி.ஆர்.டி.சி. தொமுச சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில், புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ. முன்னிலையில் தொழிலாளர்கள் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், மாநில திமுக துணை அமைப்பாளர் குணாதிலீபன், பொதுக் குழு உறுப்பினர் சக்திவேல், தொகுதிச் செயலர் சக்திவேல், மாநில தொமுச தலைவர் அண்ணா அடைக்கலம், துணைத் தலைவர் காயாரோகணம், பொருளாளர் சிவக்குமார், மாநில ஆட்டோ சங்கச் செயலர் மிஷேல், கலை - இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com