முதல் முறையாக ஜிப்மரில் ரோபாடிக் அறுவைச் சிகிச்சை

தென்னிந்திய அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக ரோபாடிக் அறுவைச் சிகிச்சை செய்து புதுச்சேரி ஜிப்மர் சாதனை படைத்துள்ளது.
முதல் முறையாக ஜிப்மரில் ரோபாடிக் அறுவைச் சிகிச்சை

தென்னிந்திய அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக ரோபாடிக் அறுவைச் சிகிச்சை செய்து புதுச்சேரி ஜிப்மர் சாதனை படைத்துள்ளது.
 வாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்சை என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை ஜிப்மா இயக்குநர் மருத்துவர் சுபாஷ் சந்திர பரிஜா, ஜிப்மர் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே மற்றும் ஜிப்மர் புற்றுநோய் அறுவைச் சிகிச்சையியல் பொறுப்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
 டாவின்சி ரோபோட் மூலம் ஜிப்மரில் பல்வேறு ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.
 இந்த வரிசையில், ஜிப்மர் புற்று நோய் அறுவைச் சிகிச்சையியல் மருத்துவர் பிரசாந்த், மருத்துவர் சிவசங்கர் மற்றும் ஜிப்மர் மயக்கவியல் மருத்துவர் மோகன் ஆகியோர் இந்த மூன்று வாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்ûசையை மேற்கொண்டனர்.
 மும்பை ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் மண்டர் தேஷ் பாண்டே, அறுவைச் சிகிச்சை குழுவுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கினார்.
 வாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்சை என்பது ரோபோட் உதவியுடன் முப்பரிமாண உருவகப்படுத்துதலுடன் மிக நுட்பமான உபகரணங்களைக் கொண்டு வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது ஆகும்.
 அறுவைச் சிகிச்சைகளில் 32 வயது உடைய பெண்ணுக்கு உமிழ்நீர் சுரப்பி புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. மேலும், 22 வயது பெண்ணுக்கு உள்நாக்கில் ஏற்பட்ட புற்று நோய்க்காக மூன்றில் ஒரு பங்கு நாக்கு அகற்றப்பட்டது.
 மூன்றாவது அறுவைச் சிகிச்சை 70 வயது முதியவருக்கு வாய்ப் பகுதி அண்ணத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக மேற்கொள்ளப்பட்டது.
 மேற்கண்ட ரோபோடிக் அறுவைச் சிகிச்சை பக்கவிளைவுகளை குறைப்பதோடு, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலி, நோய் தொற்று மற்றும் ரத்த இழப்பை அதிக அளவில் தடுக்கிறது.
 பல்வேறு வகையான ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் ஜிப்மர் விரைவில் ரோபோடிக் அறுவைச்சிகிச்சையில் சிறந்த நிறுவனமாக உருப்பெறும் என்று ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா நம்பிக்கை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com