புதுச்சேரியில் இன்று போக்குவரத்தில் மாற்றம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து புதுவை போக்குவரத்து வடக்கு - கிழக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காலை வர இருப்பதையொட்டி, பொதுமக்கள் அனைவரும் முதன்மைச் சாலைகளான விமான நிலையத்துக்குச் செல்லும் சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, காமராஜர் சாலை, மகாத்மா காந்தியடிகள் சாலை மற்றும் கடற்கரை சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், பாதுகாப்பு கருதி சாலை ஓரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தக் கூடாது. அதேபோல, அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். அன்றைய தினம் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வருகை தரும் அனைவரும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக லாஸ்பேட்டையை அடைந்து, அங்கிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை வழியாக தாகூர் கலைக் கல்லூரி சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும்.
பொதுக்கூட்டத்துக்குச் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களை தாகூர் கலைக் கல்லூரி வளாகத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
விமானப் பயணிகள் கவனத்துக்கு: புதுச்சேரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விமானப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அனைவரின் ஆவணங்களும், லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகுதான் விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிரதமரின் வருகையையொட்டி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தட்டச்சு தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு: புதுவையில் தட்டச்சு தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன.
இதில் லாஸ்பேட்டை பாலிடெக்னிக்கில் தேர்வு எழுத வருபவர்கள் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மடுவுபேட்டை சென்று, அய்யனார் கோயில், நேதாஜி சிலையின் இடதுபக்கம் திரும்பி பாலிடெக்னிக்கில் நடைபெறும் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com