தில்லி கண்காட்சியில் புதுவை ஓவியங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் புதுவை ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றன.

புதுதில்லியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் புதுவை ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்றன.
 புதுதில்லி லதா கலா அகாதெமியில் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க ஓவியர்களின் ஓவியங்கள், வேர்கள் என்னும் தலைப்பில் டிச.26 முதல் ஜன.1-ஆம் தேதி வரை காட்சிப்படுத்தப்பட்டன.
 இதில், புதுவை ஓவியர்கள் டாக்டர் கோபால், சரவணா, ராஜா ஆகியோரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட் டன. தேசிய நவீன ஓவிய அரங்கத்தின் இயக்குநர் ஜான் வான புராஜான் கண்காட்சியை தொடக்கிவைத்தார். புதுச்சேரி தருமாபுரியைச் சேர்ந்த ஓவியர் கோபால் ஆன்மிகம் சார்ந்த 14 ஓவியங்களும், அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் ராஜாவின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் 13 ஓவியங்களும், சிற்பி சரவணாவின் இரும்புச் சிற்பங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையிட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com