அரசு மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில், மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில், மாணவிகள் பாரம்பரிய முறையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினர்.
 விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பூங்காவனம் தலைமை வகித்தார். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், மனையியல், வரலாறு உட்பட 14 துறைகளை சேர்ந்த அனைத்து மாணவிகளும் கல்லூரி வளாகத்தில் வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம்கட்டி, 14 மண் பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும் பாட்டுப்பாடியும், நடனமாடியும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
 சில மாணவிகள் வேட்டி, சட்டை அணிந்து வந்து அசத்தினர். இதேபோல மனையியல் துறையின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளி மாணவ, மாணவிகளும் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.
 இவ்விழாவில் மனையியல் துறைத்தலைவர் ராஜீ சுகுமார், பேராசிரியைகள் ஆஷா, ரஜினி, அலமேலு மங்கை உள்பட அனைத்துத்துறை தலைவர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 இதேபோல, கோரிமேட்டில் உள்ள மதர்தெரசா கல்லூரி, லாஸ்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா பொங்கல் வைத்தும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 அதுமட்டுமன்றி பல பள்ளிகளிலும் பொங்கல் வைத்து தமிழரின் திருநாள் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com