காகிதச் சிற்பங்கள் கண்காட்சி

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கண்ணை கவரும் காகிதச் சிற்பங்கள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் கண்ணை கவரும் காகிதச் சிற்பங்கள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
 இந்திராகாந்தி அரசு மேனிலைப்பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பாசித் ரூபானி, கணேஷ், பிரேம்நாத், ஜெனோ பெர்னாண்டஸ் ஆகியோர் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் உதவியுடன் காகிதத்திலான பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டு சிற்பங்களை செய்து, வண்ண அருவி ஆர்ட்ஸ் கேலரியில் கண்காட்சியாக வைத்துள்ளனர்.
 நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர் சந்திரன் வரவேற்றார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி சிற்ப கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களை பாராட்டினார். பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பள்ளி துணை முதல்வர் மாதவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியை எழிலரசி வாழ்த்துரை வழங்கினார்.
 கண்காட்சி குறித்து ஆசிரியர் கிருஷ்ணன் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் தங்கள் திறனுடன் கற்பனையையும் சேர்த்து கலைப்பொருள்களை உருவாக்கியுள்ளனர். இந்தக் கண்காட்சியை சனிக்கிழமை வரை மக்கள் பார்வையிடலாம்" என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com