சட்டப் பேரவையை முற்றுகையிட கொம்யூன் பஞ். ஊழியர்கள் முயற்சி 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி, புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பேரணியாக வந்து, புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி, புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பேரணியாக வந்து, புதுவை சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றனர்.
 இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் ஜன.3-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தர்னா, உள்ளாட்சித்துறை அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில் அவர்கள் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, புதுவை கம்பன் கலையரங்கம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். நகராட்சி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகணபதி, கண்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.
 கம்பன் கலையரங்கம் அருகே இருந்து புறப்பட்ட பேரணி அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, வழியாக ஜென்மராக்கினி மாதா ஆலயம் அருகே வந்ததும் காவலர்கள் தடுப்புக் கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
 இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்துசென்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com