புதுவை ஆளுநர் கிரண் பேடி - என்.ரங்கசாமி திடீர் சந்திப்பு

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை, முன்னாள் முதல்வரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை மாலை திடீரென சந்தித்துப் பேசினார்.

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை, முன்னாள் முதல்வரும் என்ஆர் காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை மாலை திடீரென சந்தித்துப் பேசினார்.
 தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான என்.ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டிபிஆர் செல்வம், திருமுருகன், ஜெயபால், அசோக் ஆனந்த், சுகுமாறன், சந்திரபிரியங்கா, கோபிகா, எம்.பி. ராதாகிருஷ்ணன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் உள்ளிட்டோர் கிரண் பேடியை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது.
 பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த என். ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநரைச் சந்தித்து புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து தெரிவித்தோம் என்றார்.
 தற்போதைய மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு அதுபற்றி விளக்கமாகக் கூறுகிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்.ரங்கசாமி.
 ஆளுநர் மாளிகை கருத்து: இதனிடையே, இந்தச் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி தலைமையில் 7 எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
 அப்போது, ஆளுநரின் வாராந்திர ஆய்வான "தூய்மையான புதுவை' நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி என்.ஆர். காங்கிரஸ் கட்சியினருக்கு ஆளுநர் கிரண் பேடி அழைப்பு விடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com