நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி, புதுவை நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 புதுச்சேரி மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி, பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம், பேரணியாக சென்று சட்டப் பேரவையை முற்றுகையிடுவது உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 இந்த நிலையில், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழுவினர் சுதேசி மில் அருகே வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தகணபதி, கண்ணன், ராமச்சந்திரன், ராம்குமார், சீனுவாசன், சகாயராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஏஐடியூசி தலைவர் வி.எஸ்.அபிஷேகம், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கெüரவத் தலைவர் சேஷாச்சலம், மாநில சிஐடியு தலைவர் வீரமுத்து, பொதுச் செயலர் தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 போராட்டத்தின் போது, நகராட்சி, கொம்யூன் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
 போராட்டம் வாபஸ்
 புதுவை மாநிலத்தில் 16 நாள்களாக நடைபெற்று வந்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் போராட்டம் வியாழக்கிழமை மாலை திரும்பப் பெறப்பட்டது.
 புதுவை மாநிலத்தில் உள்ள நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, ஊதியம் வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 16- ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து, தொழிற்சங்கங்களுடன் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நடத்திய பேச்சுவார்த்தையில் 7-ஆவது ஊதியக் குழு ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிமொழியை ஏற்று மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்களைத் திரும்பப் பெறுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
 அதன்படி, போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com