பழுதான சாலைகளை செப்பனிடக் கோரி போராட்டம்

புதுச்சேரியில் குண்டும், குழியுமான சாலைகளைச் சீரமைக்கக் கோரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் குண்டும், குழியுமான சாலைகளைச் சீரமைக்கக் கோரி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் பொதுப் பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி லாசுப்பேட்டை நந்தா நகர் ஆதிமூலம் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் சுபத்ரா (22). வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். புதன்கிழமை இரவு லாசுப்பேட்டையில் இருந்து விஐபி நகரில் உள்ள கணினிப் பயிற்சி மையத்துக்கு தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்தார்.
 அப்போது, மழையால் சேதமடைந்திருந்த சாலையின் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்துள்ளார்.
 பின்னால் வந்து கொண்டிருந்த பைக் சுபத்ரா மீது ஏறி இறங்கியது. இதில், மாணவி சுபத்ரா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 மழையால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்காததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் அசோக் ஆனந்த் தனது ஆதரவாளர்களுடன் பொதுப் பணித் துறை அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு வாயிலில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
 போராட்டம் குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அசோக் ஆனந்த் கூறியதாவது: புதுச்சேரி தட்டாஞ்சாவடிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சிகளிக்கின்றன. அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
 சாலைகளைச் சீரமைக்கக் கோரி கடந்த மாதம் பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அதிகாரிகளும் சாலைகளை வந்து பார்த்து ஆய்வு செய்தனர். ஆனால், சாலைகளைச் சீரமைக்க இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் அவர்கள் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நினைத்திருந்தால் ஒரே ஒரு நாளில் சாலைகளைச் சீரமைத்திருக்க முடியும். ஆனால், நிதி இல்லை என கூறுகின்றனர். இதனால், கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார்.
 இனியும் சாலைகளைச் சீரமைக்காவிடில் பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com