தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம்: அறிக்கை தருமாறு ஆளுநர் உத்தரவு

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம்

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக அறிக்கை தருமாறு புதுவை காவல் துறை இயக்குநர் சுனில்குமார் கெளதமுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் போன்று வேடம் சித்திரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அதிமுகவினர் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.
இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல், தமிழக முதல்வர் பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி, அறிக்கை அனுப்பும்படி புதுவை காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக புதுவை மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சுவாமிநாதன் உள்பட 11 பேர் மீது உருளையன்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com