பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு: திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த ஜூன், ஜூலையில் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு சிறப்பு துணைத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் scan.tndge.in ய் என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
அப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பின் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று, HSE First Year June/July 2018 - Statement of Marks (Including RV&RT) - Server 1-I Click செய்து, தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார் குப்புசாமி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com