வில்லியனூருக்கு இன்று நன்றி பரிகார பாத யாத்திரை

வில்லியனூருக்கு 41-ஆவது ஆண்டாக நன்றி பரிகார பாத யாத்திரை சனிக்கிழமை (அக். 13) நடைபெறுகிறது.

வில்லியனூருக்கு 41-ஆவது ஆண்டாக நன்றி பரிகார பாத யாத்திரை சனிக்கிழமை (அக். 13) நடைபெறுகிறது.
புதுச்சேரியில் கடந்த 1977-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புயல் தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனால், புதுச்சேரியில் பேரழிவு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
இந்தச் சூழலில், வில்லியனூர் மாதாவிடம் புயல் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும்படி பிரார்த்தனை செய்யப்பட்டது. 
இந்த நிலையில், புயல் திசைமாறிச் சென்றது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புதுச்சேரி நகர மக்கள் வில்லியனூருக்கு பாத யாத்திரையாக மேற்கொள்கின்றனர்.
அதன்படி, 41-ஆம் ஆண்டாக சனிக்கிழமை பாத யாத்திரை பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள புனித ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் இருந்து தொடங்குகிறது.
யாத்திரையை புதுவை மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தொடக்கி வைக்கிறார். தேர் பவனியை பேராலய பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் தொடக்கி வைக்கிறார். 
மாலை 5.30 மணிக்கு வில்லியனூர் சந்தை வீதியில் மேள தாளத்துடன்  மாதா தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பவனியாக ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படு
கிறது.
பின்னர், அருள்நிறை ஆலயத்தின் இடதுபுறம் புதிதாக கட்டப்பட உள்ள லூர்து அன்னை கெபிக்கு சேலம் ஆயர் சிங்கராயர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, பரிகாரக் கூட்டுத் திருப்பலி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com