பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 33 எம்பிபிஎஸ் இடங்களுக்குநாளை சிறப்பு கலந்தாய்வு

புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 33 எம்பிபிஎஸ் இடங்களுக்கு திங்கள்கிழமை (அக்.15) கலந்தாய்வு நடைபெறுகிறது.

புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 33 எம்பிபிஎஸ் இடங்களுக்கு திங்கள்கிழமை (அக்.15) கலந்தாய்வு நடைபெறுகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி புதுச்சேரி பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 33 எம்பிபிஎஸ் இடங்களுக்கு திங்கள்கிழமை கலந்தாய்வு நடைபெறும்.  கடந்த ஆக.30-ஆம் தேதி சென்டாக் இணையத்தில் வெளியிடப்பட்ட 330 மாணவர்கள் கொண்ட தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள். பிள்ளைச்சாவடியில் உள்ள புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் மதியம் ஒரு மணியளவில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
முதலாமாண்டு கல்விக் கட்டணமாக ரூ.16  லட்சத்தை  எந்த மாணவர்கள் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படும். இந்தக் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் நீட் மதிப்பெண் அட்டை, அசல் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.  மாணவர்கள் எம்பிபிஎஸ் சீட் தேர்வு செய்த பிறகு கல்லூரியில் சேர தவறினால் அவர்கள் செலுத்திய தொகையை இழக்க நேரிடும்.
இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் சென்டாக் ஒருங்கிணைப்பாளருக்கு ஏற்றபடி பணத்தை வரைவோலையாகக் கொண்டு வர வேண்டும். மேலும்,  மாணவர்கள் பணம் செலுத்துவதற்கு ஏதுவாக வங்கி கவுன்டர் செயல்படும்.  இந்த கலந்தாய்வில் சீட் கிடைத்தால் சேர்வதற்கு மாணவர்கள் தயார் நிலையில் வர வேண்டும்.  இத்தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com