குட்கா ஊழல் விவகாரம்: புதுச்சேரி தனியார் நிறுவன மேலாளர் உள்பட 3 பேரிடம் சிபிஐ விசாரணை

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் 2 ஊழியர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குட்கா ஊழல் விவகாரம் தொடர்பாக, புதுச்சேரியில் தனியார் நிறுவன மேலாளர் மற்றும் 2 ஊழியர்களிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
 தமிழகத்தில் குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் உள்ள மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்குச் சொந்தமான பல்வேறு கிடங்குகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
 அப்போது, டைரி ஒன்று சிக்கியது. அதில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்ய தமிழகத்தில் யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
 குட்கா விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
 இந்த நிலையில், மாதவராவ் மனைவி லட்சுமி காயத்ரிக்குச் சொந்தமான சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனம் புதுச்சேரி அருகே திருபுவனையில் இயங்கி வருகிறது.
 இந்த நிறுவனத்தில் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர்.
 மேலும், இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் மேலாளர் தனபால், கணக்காளர் பாலு மற்றும் சுப்பையாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் குட்கா பதுக்கப்பட்டது குறித்து எந்தவித தடயங்களும் கிடைக்காததால் மேலாளர் மற்றும் கணக்காளர்களை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
 குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனை மேற்கொண்டது குறித்து தகவலறிந்து வந்த புதுச்சேரி காவல் துறை கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீஸார் சோப்பு ஆயில் தயாரிக்கும் நிறுவனத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com