புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் "அன்னதானத் திட்டம் படிப்படியாக விரிவாக்கம்'

புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் படிப்படியாக அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

புதுவையில் அனைத்துக் கோயில்களிலும் படிப்படியாக அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அந்த மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 விநாயகப் பெருமானை இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்களும் மனமுவந்து இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்கி வருகின்றனர். இந்தத் திட்டம் படிப்படியாக அனைத்து கோயில்களிலும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
 புதுவை மாநில இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி கடந்த ஜன. 16-ஆம் தேதி மணக்குள விநாயகர் கோயிலில் தொடக்கிவைத்தார். தொடர்ந்து, வேதபுரீஸ்வரர் கோயில், குரு சித்தானந்தா கோயில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், திருநள்ளார் சனீஸ்வரன் கோயில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயில் உள்பட 10 கோயில்களில் தற்போது வெள்ளி, சனிக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com