பிளஸ் 2 துணைத் தேர்வு: செப். 17 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு செப். 17-ஆம் தேதி முதல் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு செப். 17-ஆம் தேதி முதல் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று புதுவை பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-ஆம் ஆண்டு செப்டம்பர்,  அக்டோபரில் நடைபெற உள்ள மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத அரசு தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வர்களும் (தத்கல் உள்பட) 
செப். 17-ஆம் தேதி பகல் 2 மணி முதல்  ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வர்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்துக்குச் சென்று  ஏநஉ ள்ங்ஸ்ரீர்ய்க் ஹ்ங்ஹழ் நங்ல்ற்ங்ம்க்ஷங்ழ்/ ஞஸ்ரீற்ர்க்ஷங்ழ் 2018 ஏஹப்ப் பண்ஸ்ரீந்ங்ற் ஈர்ஜ்ய்ப்ர்ஹக் என்பதை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண், பிறந்த தேதியைப் பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறை தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறை தேர்வை மீண்டும் செய்வதுடன், எழுத்து தேர்வையும் எழுத வேண்டும். அதேபோல 200 மதிப்பெண்கள் கொண்ட செய்முறை தேர்வு உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் மீண்டும் செய்முறை தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com