அண்ணா பிறந்த தினம்: அரசியல் கட்சியினர் மரியாதை

மறைந்த தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்த தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர்

மறைந்த தமிழக முதல்வர் சி.என்.அண்ணாதுரையின் பிறந்த தினத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை அரசின் செய்தி - விளம்பரத் துறை சார்பில், அண்ணா பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக சார்பில் உப்பளத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாநிலச் செயலர் புருஷோத்தமன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதுபோல, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமையிலும், வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் லெனின் வீதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓம்சக்தி சேகர் தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com