அரியாங்குப்பத்தில் ஆளுநர் கிரண் பேடி ஆய்வு

புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.


புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் மிதிவண்டியில் சென்று கள ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் தனது 189-ஆவது கள ஆய்வு பயணத்தை சனிக்கிழமை மேற்கொண்டார். இதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து மிதிவண்டியில் அரியாங்குப்பத்துக்குச் சென்றார்.
அரியாங்குப்பம் கொம்யூனுக்கு உள்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையில் இருந்து ஆளுநர் கிரண் பேடி தலைமையில் மிதிவண்டியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பூரணாங்குப்பம், நல்லவாடு, தானம்பாளையம், தவளக்குப்பம் வரை இந்த பேரணி நடைபெற்றது. குப்பைத் தொட்டிகள் வைத்து குப்பைகளைச் சேகரிப்பது குறித்து இந்தக் கிராமங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் யுவராஜ் விளக்கினார்.
அதேபோல, நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் செளத்ரி தலைமையில் மிதிவண்டியில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி வழுதாவூர் சாலை, கொக்கு பூங்கா சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை, முதலியார்பேட்டை, காந்தி சாலை, அண்ணா சாலை, மகராஜ் சாலை, ராஜீவ் காந்தி சதுக்கம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.
காரைக்காலில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் சுகாதார விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல, மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் சுகாதார விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com