நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: முதல்வர் நாராயணசாமி

நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.

நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், கடற்கரை மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் சர்வதேச கடற்கரை துப்புரவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுவையில் நிகழ் ஆண்டுக்கான சர்வதேச கடலோரத் துப்புரவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கடற்கரைச் சாலை மற்றும் கடலோரப் பகுதிகளில் தூய்மை செய்யும் பணியைத் தொடக்கி வைத்தனர்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக், மக்காத பாலிதீன் பைகளைத் தடை செய்வதற்கு அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், தொழில்சாலைகள் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வர வேண்டும். புதுச்சேரியை தூய்மையாக வைத்திருந்தால்தான் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்பதை பொதுமக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படையினர், பொதுப் பணித் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு துப்புரவுப் பணியை மேற்கொண்டனர். இதேபோல, காலாப்பட்டு, ஆரோவில், புதுக்குப்பம், மூர்த்திக்குப்பம், வீராம்பட்டினம் உள்ளிட்ட 16 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com