ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி புதுச்சேரி தனியார் அரங்கில்

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு, புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி புதுச்சேரி தனியார் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 திட்ட அதிகாரி விஜயா வரவேற்றார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஷ்வந்தையா தலைமை வகித்தார்.
 சித்த மருத்துவர் ஹேமலதா, பொது சுகாதார செவிலிய அதிகாரி கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 பிப்டிக் தலைவர் இரா. சிவா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சியை தொடக்கிவைத்தார். தொடர்ந்து சிறந்த தாய்மார்களுக்கு ஊக்கப் பரிசும், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மாணவிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்களையும் வழங்கினார். ஏற்பாடுகளை உருளையன்பேட்டை தொகுதி அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com