காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்: நில அளவை அலுவலர்கள் சங்கம்

நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று நிலஅளவை அலுவலர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நில அளவைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று நிலஅளவை அலுவலர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் பவள விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு கள்ளக்குறிச்சியில் தனியார் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் எஸ்.கனகராஜ் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் எம்.சண்முகம், மாவட்டப் பொருளாளர் பி.இராஜாமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் கே.செந்தில்முருகன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எம்.பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
மாநில பொருளாளர் ஜெ.ராஜா மாநாட்டுக் கொடியேற்றி வைத்துப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் ப.குமாரவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நில அளவை ஓய்வு பெற்றோர் சங்க மாநில பொருளாளர் பி.இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ஜி.சாம்பசிவம், அரசு ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினார்.
மாநாட்டில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்தவேண்டும், ஏழாவது ஊதியக் குழுவில் ஊதிய மாற்றம் பெற்றிட 8-வது ஊதியக் குழுவை அமைத்திடவும், தொழில்நுட்ப துறையாக அறிவிக்க செய்திடவும், காலிப் பணியிடங்களை நிரப்பிடவும், களப் பணியாளர்களுக்கு புல உதவியாளர்கள் பெற்றிடவும், குறுவட்ட அலுவலர் துணை ஆய்வாளர் ஆகியோருக்கு குடியிருப்பு பெற்றிடவும், பணிச் சுமையை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒரத்தநாடு நில அளவை பயிற்சி நிலைய பயிற்றுநர் இரா.சந்திரசேகரன், பெரம்பலூர் மாவட்ட ஆய்வாளர் து.செல்வராஜ், கோட்ட கிளைத் தலைவர் இரா.பெருமாள், ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் நாகலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர் பி.இராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிறைவில் மாவட்ட துணைத் தலைவர் டி.நடராஜன் நன்றி கூறினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மாவட்ட பொருளாளர் எம்.பிரபாகரன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com