போலீஸாருக்கு சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாருக்கு சாலைப் பாதுகாப்புக்கான உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாருக்கு சாலைப் பாதுகாப்புக்கான உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைக்கும் விதத்தில், கடந்த 2015-16 ஆம் ஆண்டு சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து, மாவட்ட ஆட்சியர் நிதியளித்தார். இதில், சாலைப் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி போலீஸாருக்கு வழங்கப்பட்டன.
உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் பங்கேற்று, விழுப்புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், காவல் உதவி மைய போலீஸார், ஆயுதப்படை போலீஸாருக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். விபத்துப் பகுதியை எச்சரிக்கை விடுக்கும் சாலைத் தடுப்பு பிரதிபலிப்பான்கள் 100, சாலை வேகத் தடுப்பை குறிக்கும் ரப்பர் பிரதிபலிப்பான்கள் 20 இடங்களுக்கும், சாலைத் தடுப்பு பிரிதிபலிப்பான் கொண்ட கோன்கள் 1,000, ரீச்சார்ஜ் கைவிளக்குகள் 200, எல்இடி கைவிளக்குகள் 50, பிரிதிபலிப்பான் சட்டைகள் 300 உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. ஆயுதப்படை டிஎஸ்பி நாராயணசாமி, தனிப் பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர்கள் விஜயகுமார், திருமணி, கணேசன், போக்குவரத்து ஆய்வாளர்கள் கோதண்டராமன், பூபதி, அப்பன்டைராஜ், ஞானவேல், லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com