விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ.16 கோடியில் பணிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ.16 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க ரூ.16 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சி நிவாரணம், குடிநீர் வழங்கல் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தொழில்துறை முதன்மைச் செயலரான, மாவட்ட வறட்சி கண்காணிப்பு அலுவலர் அதுல்யமிஸ்ரா, ஆட்சியர் இல.சுப்பிரமணியன், எம்பிக்கள் காமராஜ், ஏழுமலை, எம்எல்ஏக்கள் மஸ்தான், ராதாமணி, மாசிலாமணி, உதயசூரியன், சீத்தாபதி, வசந்தம் கார்த்திகேயன், குமரகுரு, பிரபு, சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், திட்ட அலுவலர் மகேந்திரன் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழகத்தில் வறட்சி நிலவியதால், 32 மாவட்டங்களும் வறட்சி பாதித்ததாக அறிவிக்கப்பட்டன.
வறட்சி நிலங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்துக்கு, வறட்சி பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் ரூ.84.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 51 ஆயிரத்து 897 விவசாயிகளுக்கு, ரூ.78 கோடி அளவில், அவரவர் வங்கிக் கணக்கில் நிவாரணம் வரவு வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் வழங்குவதற்காக, அரசு நிதி ரூ.16 கோடியே 40 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டில், 646 சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் 1,099 ஊராட்சிகளில் 15,011 கைப் பம்புகளும், 5,440 பவர் பம்புகளும் உள்ளன. இதில், 13,169 கைப் பம்புகளும், 5,022 பவர் பம்புகளும் செயல்பாட்டில் உள்ளன.
5,064 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், 4,980 தொட்டிகள் செயல்பாட்டில் உள்ளன. 8,911 சிறு மின்விசை இறைப்பான்களில், 8,387 செயல்பாட்டில் உள்ளன. கோடையில் ஏற்படும் தண்ணீர் பற்றாக் குறையை போக்கவும், குடிநீர்ப் பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.
கால்நடைகளுக்கு குடிநீர்ப் பிரச்னை ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com