கீழ்மலையனூரில் 2 பெண்களுக்கு டெங்கு அறிகுறி: சுகாதாரத் துறை முகாமிட்டு பரிசோதனை

மயிலம் தொகுதிக்கு உள்பட்ட கீழ்மலையனூர் ஊராட்சியில் 2 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள நிலையில், அந்தக் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் சனிக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.

மயிலம் தொகுதிக்கு உள்பட்ட கீழ்மலையனூர் ஊராட்சியில் 2 பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள நிலையில், அந்தக் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் சனிக்கிழமை சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது.
கீழ்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த தாட்சாயணி (49), அஞ்சலை (47) ஆகிய இரு பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக மயிலம் தொகுதி எம்எல்ஏ இரா.மாசிலாமணிக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அந்தப் பெண்களை நேரில் சந்தித்து
எம்எல்ஏ ஆறுதல் கூறினார். பின்னர், இதுகுறித்து அவர் மாவட்ட சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, ஒலக்கூர் வட்டார மருத்துவர் செந்தில்குமார் தலைமையில், மருத்துவக் குழுவினர் கீழ்மலையனூர் கிராமத்தில் சிறப்பு முகாம் அமைத்து, அந்தப் பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரை வழங்கி வருகின்றனர். மேலும், கிராமம் முழுவதும் வீடு வீடாக கொசு ஒழிக்கும் புகை மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
எம்எல்ஏவுடன் ஊராட்சிச் செயலர் பழனி, தாதாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பத்மஷா, திமுக ஒன்றியச் செயலர் ராஜாராம், நிர்வாகிகள் கொடியம்குமார், திருஞானசம்பந்தம், சிவபிரகாசம், கலியபெருமாள் உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com