"வளர்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்'

விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தினார்.
 விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, தமிழக அரசின் நகர் மற்றும் ஊரமைப்புத் துறை ஆணையர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
 கூட்டத்தில் வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, மாவட்ட வழங்கல் துறை, மகளிர் மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிப் பணிகள், கடந்த 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட பணிகளின் இலக்கு ஆகியவை குறித்தும் துறைசார்ந்த அதிகாரிகளிடம் கண்காணிப்பு அதிகாரி கேட்டறிந்தார்.
 தொடர்ந்து, திட்டப் பணிகளில் நிறைவுற்ற பணிகள் குறித்தும், தற்போது நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 திட்டப் பணிகளில், கால தாமதம் குறித்தும் கேட்டறிந்த அவர், பணிகளை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். மேலும், அந்தந்த துறைகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்றப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
 ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்
 ஆர்.பிரியா, திண்டிவனம் உதவி ஆட்சியர் மெர்சி ரம்யா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, மல்லிகா, மாவட்ட சமூகநல அலுவலர் கே.லலிதா, குழந்தைதகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பழகி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் செல்வராஜ், கால்நடைத் துறை இணை இயக்குநர் குருவையா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com