அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

சட்ட மேதை அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

சட்ட மேதை அம்பேத்கரின் 61-ஆவது நினைவு தினம் விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக சார்பில் மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்எல்ஏ ராதாமணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணைச் செயலர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நகர அவைத் தலைவர் சக்கரை, துணைத் தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் வழுதரெட்டி அம்பேத்கர் சிலைக்கு, முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆசைத்தம்பி, சந்திரசேகர், கதிரவன், வீரப்பன், சகாதேவன், கலியமூர்த்தி, முனுஆதி, மணிமுருகன், ராமச்சந்திரன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தனசேகரன், பாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
டாக்டர் அம்பேத்கர் பேரவை சார்பில் இளைஞரணி அமைப்பாளர் பிராங்க் நிக்கோலஸ் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய குடியரசுக் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் நாகமணி தலைமையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய குடியரசு கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மண்டல அமைப்பாளர் வேலு தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் நீதிமன்ற வளாகம் எதிரே, வழக்குரைஞர்கள் அம்பேத்கர் நினைவு தினம் கடைப்பிடித்தனர். வழக்குரைஞர் பிரபுவளவன் வரவேற்றார். வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, அம்பேத்கர் உருவப்படத்தை திறந்து வைத்து, மாலை அணிவித்து உரையாற்றினார்.
வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் அதிமுக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ ஜானகிராமன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் குமார், உமாபதி, இளையராஜா, மூர்த்தி, ஜெயசங்கர், வீரப்பன், சுமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஒன்றிய செயலாளர் தங்க.சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வழக்குரைஞர் சிவபெருமாள், சதீஷ், சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தேமுதிக சார்பில் ஒன்றியச் செயலாளர் மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத் தலைவர் கணபதி, ராதாகிருஷ்ணன், ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, வீரன், பாபு, ஏழுமலை, கந்தசாமி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர்
இரா.பாமரன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநிலக் கொள்கைப்பரப்பு துணைச் செயலர் தமிழ்நிலவன், தொகுதிச் செயலர் வீர.விடுதலைச்செல்வன், மாவட்டத் தொண்டரணி துணைச் செயலர் எஸ்.வெற்றிவேல், ஒன்றியச் செயலர்கள் சிவா, நாகேஸ்வரராவ், நகரச் செயலர்கள் செந்தில், சத்தியதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில் ஒன்றியச் செயலர்கள் ஆர்.காமராஜ், டி.சரவணன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நகரச் செயலர் அஷ்ரப்அலி, நகரத் துணைச் செயலர் ஆர்.வீரவேல், நகரப் பொருளாளர் டி.அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அம்பேத்கர் பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் மு.சேகர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
செஞ்சி: செஞ்சியில் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்ட அம்பேத்கரின் உருவப் படத்துக்கு நகரச் செயலர் காஜாநஜீர் தலைமையில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அரங்க.ஏழுமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், நகர அவைத்தலைவர் பார்சுதுரை, துணைச் செயலர் செயல்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜக: பாஜக சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராஜேந்திரன் செஞ்சி கூட்டுச் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செஞ்சி ஒன்றியத் தலைவர் பொன்பத்தி ராஜேந்திரன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலர் சந்திரசேகர், செஞ்சிநகர தலைவர் நரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com