வேளாண் அறிவியல் நிலையத்தில் மண் வள தின விழா

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா அண்மையில் நடைபெற்றது.

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா அண்மையில் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கா.பரமேஸ்வரி மண் வளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கி.செல்வராஜ் தலைமை வகித்து, பிரதம மந்திரியின் மண் வள தின கையேடு, மண் பரிசோதனை பற்றிய கையேட்டை வெளியிட்டு, மண் வள அட்டைடை விவசாயிகளுக்கு வழங்கினார்.
 எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ர.வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். மண் வளத்தின் அவசியம், மண் மாதிரி எடுத்தல், களர் மற்றும் உவர் மண் மேலாண்மை பற்றிய தொழில்நுட்பங்களை விவரித்து செயல்விளக்கங்களை விஞ்ஞானிகள் விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com