காவலர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்காக 37,120 விண்ணப்பங்கள் அஞ்சலகம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க புதன்கிழமை (பிப்.22) கடைசி நாளாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்காக 37,120 விண்ணப்பங்கள் அஞ்சலகம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க புதன்கிழமை (பிப்.22) கடைசி நாளாகும்.

ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல் படை இரண்டாம் நிலை காவலர், தீயணைப்போர் ஆகிய பணிகளுக்கு தமிழக காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அஞ்சலகங்கள் மூலம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், தியாகதுருகம், வானூர் ஆகிய தலைமை மற்றும் வட்டார அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பக் கட்டணம் ரூ.30. விண்ணப்ப விநியோகம் தொடங்கிய நாளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு அஞ்சலகங்களுக்குச் சென்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர புதன்கிழமை (பிப். 22) கடைசி நாளாகும். செவ்வாய்க்கிழமை வரை (பிப்.21) மாவட்டம் முழுவதும் 37,120 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. அதிகபட்சமாக விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில் 17,271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமையும் அஞ்சலகங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என்றும் அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com