காமராஜர் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை

விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், தமாகா, பாமக, விசிக கட்சிகள் சார்பில் சனிக்கிழமை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ், தமாகா, பாமக, விசிக கட்சிகள் சார்பில் சனிக்கிழமை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 115-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள காமராஜர் சிலை அருகே காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு வடக்கு மாவட்டத் தலைவர் சீனுவாசகுமார் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து அமராபதி விநாயகர் கோயில் எதிரே நடைபெற்ற விழாவில் 1,500 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.
மாவட்ட பொதுச் செயலர் தயானந்தம், முன்னாள் மாநிலச் செயலர் ராமமூர்த்தி, நகரத் தலைவர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவா, சீராம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நகர காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில், முன்னாள் மாவட்டத் தலைவரும் ஆந்திர மாநில தேர்தல் மேலிட பார்வையாளருமான எம்.டி.குலாம்மொய்தீன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, காந்தி , நேரு சிலைகளுக்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனையடுத்து, மாற்றுத் திறன் சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பும், உணவும் வழங்கினர். நிரந்தர அழைப்பாளர் கோ.பாலசுப்பிரமணியம், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட பொதுச் செயலர்கள் முபாரக்அலி, காஜா உள்ளிட்ட காங்கிரஸார் கலந்துகொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் வி.தசரதன் தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில இணைச் செயலர் ஆர்.ஜெயபால், நகரத் தலைவர் எஸ்.ஹரிபாபு, கபிலன் ஆகியோர் இனிப்புகள் வழங்கினர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் நத்தர்மொய்தீன், மாவட்டப் பொதுச் செயலர் ரஞ்சித்குமார், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க.ஜோதி தலைமை வகித்து, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மாநில துணைப் பொதுச் செயலர் சிவக்குமார், மாவட்டச் செயலர் புகழேந்தி, முன்னாள் மாவட்டச் செயலர் பழனிவேல், பொருளாளர் செந்தில், வன்னியர் சங்கத் தலைவர் புண்ணியக்கோடி, மாநில இளைஞர் சங்கச் செயலர் தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் ஆற்றலரசு தலைமை வகித்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
வழக்குரைஞர்கள் சேரலாதன், சரவணன், செய்தி தொடர்பாளர் தமிழேந்தி, வளவன், கார்வேந்தன், இரணியன், பெரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செஞ்சி
வல்லம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் மேலாத்தூர் கோபால் தலைமை வகித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கிப் பேசினார்.
விழாவில் மயிலம் சட்டப்பேரவை தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வல்லம் கலைச்செல்வன், வீரணாமூர் வெங்கடேசன், ஆனந்தசேகர், பூபாலன், விஜயன் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை மற்றும் வெள்ளயூர் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மாநிலப் பேச்சாளர் எஸ்.பெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் பி.பிச்சைக்கனி, ஏ.முகமது அலி, முகம்மது ரபீக், பி.வேல்மயில், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திண்டிவனம்
திண்டிவனம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், நேரு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காமராஜரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நகரத் தலைவர் விநாயகம் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் தனுசு, மாவட்ட பொதுச் செயலர்கள் சுப்பையா, ஜானி, மாவட்ட விவசாய அணி சார்பில் சாரம் சீத்தாராமன், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொன்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தமாகா சார்பில் நேரு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாவட்ட பொதுச்செயலர் சின்னத்தம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நகரத் தலைவர் சீனிவாசன், மாவட்டச் செயலர் தட்சிணாமூர்த்தி, மூத்தத் தலைவர் கோபால், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com