இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணியினர் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணியினர் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் தரணிதரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முரளி, சுதர்சன், சுரேஷ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தித் தொடர்பாளர் ரமேஷ் வரவேற்றார்.
 மாநிலச் செயலாளர் சுனில்குமார், மாவட்டப் பொதுச் செயலாளர் ஏழுமலை, மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
 பல்வேறு இலவசங்களை தரும் தமிழக அரசு, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது வேதனையைத் தருகிறது. அனைத்து கோயில்களிலும் தரிசனக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் நகர நிர்வாகி பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். நகரச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com