தமிழக அரசுக்கு அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கத்தினர் நன்றி

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை ரூ.2,500ஆக உயர்த்தி அறிவித்த தமிழக அரசுக்கு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
 அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக அரசின் உதவித் தொகை பெற்று வருகின்றனர். ரூ.1000 என்றிருந்ததை கடந்த 2012-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். மேலும், தமிழறிஞர்கள் வெளியூர் இலக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வதற்கு ஏதுவாக கடந்த 2014ஆம் ஆண்டில் இலவச பேருந்துப் பயண அட்டையையும் அவர் வழங்கினார்.
 இந்த நிலையில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித் தொகையை ரூ.2ஆயிரத்திலிருந்து ரூ.2,500ஆக உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.
 இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சர், தமிழ்த் துறைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சங்கத்தைச் சார்ந்த தலைவர் தங்க.சங்கரபாண்டியன், செயலாளர் இரா.துரைமுருகன், பொருளாளர் மா.தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் அ.சி.சின்னப்பதமிழ் மற்றும் சங்கத்தினர் அரசுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com