மணல் திருட்டு: 8 லாரிகள், 3 பொக்லைன்கள் பறிமுதல்: 14 பேர் கைது

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணலைத் திருடியதாக 3 பொக்லைன்கள், 8 லாரிகள்,

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி ஆற்றில் மணலைத் திருடியதாக 3 பொக்லைன்கள், 8 லாரிகள், 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து 14 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூர் கோமுகி ஆற்றில், உரிமம் இல்லாமல் மணலை டிப்பர் லாரிகள் மூலம் பொக்லைன்கள் உதவியுடன் அள்ளிச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
 அதன் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் த.வீமராஜ் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
 அப்போது, விருகாவூர் ஆற்றில் சிலர் வாகனங்கள் மூலம் மணலைத் திருடி, ராஜா என்பவரது நிலத்தின் அருகில் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.
 இதுதொடர்பாக 8 லாரிகள், ஒரு டிராக்டர்,5 மோட்டார் சைக்கிள்கள், மணலை அள்ள பயன்படுத்திய 3 பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்து 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 அதில் மோகன்குமார் (37), இளங்கோவன் (45), வினோத் (26), மணி (28), சக்திவேல் (23), கார்த்திக் (25), திருமலை (21), வீரமணி (27), முருகன் (35), விக்னேஷ் (19), ரகு (19), கோகுல் (23), சரவணன் (21), அந்தோணிராஜ் (28) ஆகியோர் உள்ளிட்ட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 மேலும், தலைமறைவான சடையன், மாரிமுத்து மனைவி மாரியம்மாள், கண்ணையன், சுரேஷ், ராஜகண்ணு, வெங்கடேசன், பச்சைமுத்து, செல்வராஜ், விருகாவூர் ராஜா (37) உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.
 பறிமுதல் செய்யப்பட்டு வரஞ்சரம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீ.ஜெயக்குமார் பார்வையிட்டார்.
 இதுதொடர்பாக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்
 த.வீமராஜை விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீ.ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com