வானூரில் பாமக கொடிக்கம்பம் சேதம்

வானூரில் பாமக கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியினர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

வானூரில் பாமக கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அக்கட்சியினர் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
 வானூர் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் பாமக ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. அங்கு, கட்சியின் 29-ஆவது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியினர், மாவட்டச் செயலாளர் சேது தலைமையில், கட்சிக் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 இந்த நிலையில், திங்கள்கிழமை கட்சியினர் வந்து பார்த்தபோது, பாமக அலுவலகத்தின் வாயில் பகுதியில் இருந்த கட்சிக் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டும், கம்பத்தின் பீடத்தின் கட்டுமானங்கள் உடைக்கப்பட்டும் கிடந்தன. கட்சிக் கொடியும் திருடும் போயிருந்தது. இதனையறிந்த பாமகவினர் அங்கே திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரோவில் காவல் ஆய்வாளர் பிரதீப்குமார் மற்றும் போலீஸார் விரைந்து வந்து, பாமக கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருந்ததை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
 இது தொடர்பாக, பாமக ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் போலீஸில் புகார் கொடுத்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் சௌந்தர், மாநில துணைச் செயலர் தருமன், வன்னியர் சங்கத் தலைவர் ராமலிங்கம் மற்றும் கட்சியினர் திரண்டு, கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com