68 இடங்களில் போலீஸார் வாகனச் சோதனை

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு 68 இடங்களில் போலீஸார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு 68 இடங்களில் போலீஸார் திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல், மதுக் கடத்தல், கூலிப்படையினர் அட்டகாசம், திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க போலீஸார் ரோந்து செல்வது, சிறப்புக் குழுக்களை அழைத்து கண்காணிப்பது போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அவற்றில் சிக்காமல் குற்றவாளிகள் தொடர்ந்து தப்பிச் செல்வதும் நிகழ்ந்து வருகிறது.
 இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 8 துணைக் கண்காணிப்பாளர்கள், 35காவல் ஆய்வாளர்கள் உள்பட
 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம்-திருச்சி சாலையில் கெல்லிஸ் சத்திரம் சாலை சந்திப்பு பகுதியில் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
 இதேபோன்று, திண்டிவம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, மரக்காணம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளிலும் வாகனச் சோதனை நடைபெற்றது.
 இரவு நேரத்தில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள், திருட்டு பைக்குள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் போன்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கும் வகையில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.
 மேலும், தலைமறைவு ரௌடிகள், பிடியாணை விதிக்கப்பட்டவர்களையும் பிடிக்கவும் இச்சோதனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தச் சோதனை நள்ளிரவையும் கடந்து நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com