அரசுப் பேருந்து ஜப்தி

சாலை விபத்து இழப்பீடு வழங்கப்படாததால், திண்டிவனத்தில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

சாலை விபத்து இழப்பீடு வழங்கப்படாததால், திண்டிவனத்தில் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
 திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாது (40). இவர், கடந்த 2007ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி அதே கிராமத்தில் உள்ள திண்டிவனம்-வந்தவாசி செல்லும் சாலையில் நடந்து சென்றபோது அரசுப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
 உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது மனைவி ஜெயந்தி, திண்டிவனம் 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், அய்யாதுவின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 51 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
 இழப்பீடு வழங்காத நிலையில், இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன், வட்டியுடன் சேர்த்து இழப்பீடாக ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 843 ரூபாய் வழங்க வேண்டுமெனவும், தவறினால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யவும் கடந்த மாதம் 12ஆம் தேதி உத்தரவிட்டார்.
 ஆனாலும், இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையத்துக்கு வந்த அரசுப் பேருந்தை கட்டளை நிறைவேற்றுநர் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்குக் கொண்டு சென்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com