மணல் திருட்டு: 4 பேர் மீது வழக்கு

விழுப்புரம், காணை பகுதிகளில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், காணை பகுதிகளில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை எல்லீஸ்சத்திரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக ஏனாதிமங்கலம் அய்யனார் (31), பன்னீர் (40) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 காணை பகுதியில்...: காணை காவல் உதவி ஆய்வாளர் ஹரிகரசுதன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை அதிகாலை பெரும்பாக்கம் பகுதியில் ரோந்து சென்ற போது, அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 மாட்டு வண்டிகளை மடக்கிப் பிடித்தனர். இதுதொடர்பாக வெங்கந்தூரைச் சேர்ந்த சுதாகர் (33), ராமதாஸ் (55) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com