பள்ளிகளில் சர்வதேச யோகா தின விழா

சர்வதேச யோகா தினத்தையொட்டி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் யோகா சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி, உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் யோகா சிறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலையில் நடைபெற்றது.
 இதனை உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.
 ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாஸப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.
 ரோட்டரி சங்க தலைவர் மோகன்ராஜ், முன்னாள் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சௌ.இராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். உளுந்தூர்பேட்டை வட்டார காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். யோகாப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
 பென்னகரில்... செஞ்சி வட்டம், பென்னகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாசன நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.
 தலைமை ஆசிரியர் என்.முனுசாமி தலைமை வகித்தார்.
 செஞ்சி ஈஷா யோகா மையத்தின் தன்னார்வ தொண்டர்கள் வெங்கடேசன், கோவிந்தன், ஜெயபால், சங்கீதா, அமுதா ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர்.
 பள்ளியில் பயிலும் 250 மாணவ, மாணவிகளும் யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஆசிரிய, ஆசிரியைகள், கிராம பொது மக்கள் ஆகியோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர். பயிற்சி காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்றது.
 வாணாபுரத்தில்...: ரிஷிவந்தியம் அருகே வாணாபுரம் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு, உறைவிடப் பள்ளியில், சர்வதேச யோகா தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 ரோஸ் எட் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் ம.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். உடற்பயிற்சி ஆசிரியை எழிலரசி வரவேற்றார்.
 திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் கலந்துகொண்டு, மாணவிகள் யோகா செய்ய வேண்டியதன் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்துப் பேசினார். ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவர் சு.இராஜேந்திரன், சிறந்த முறையில் யோகாசனம் செய்த மாணவிகள் ரேவதி, கோகிலா, அபிநயா, வினிஷா, சுபா உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கினார். யோகா விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com