'டான்செட்' தேர்வு: விழுப்புரம் மையத்தில் 476 பேர் பங்கேற்பு

விழுப்புரம் அரசுப் பொறியியல் கல்லூரி மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய பொறியியல் மேற்படிப்பு சேர்க்கைக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வில் 476 பேர் பங்கேற்றனர்.

விழுப்புரம் அரசுப் பொறியியல் கல்லூரி மையத்தில் சனிக்கிழமை தொடங்கிய பொறியியல் மேற்படிப்பு சேர்க்கைக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வில் 476 பேர் பங்கேற்றனர்.
தமிழக அரசு சார்பில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க் ஆகிய பொறியியல் மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான (டான்செட்) நுழைவுத் தேர்வு, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்படுகிறது.
இந்தாண்டிற்கான இத்தேர்வு (25.3.2017) சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் நடைபெறும் இத்தேர்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி மையத்தில் தேர்வு நடைபெறுகிறது. இரண்டு தினங்களிலும் நடைபெறும் எம்சிஏ, எம்பிஏ, எம்இ படிப்பு நுழைவுத் தேர்வுகளில் 1,000 பேர் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர்.
இதன்படி, முதல் நாள் தேர்வு சனிக்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணிவரை நடைபெற்ற எம்சிஏ தேர்வில் 143 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மாலை 2.30 மணிக்குத் தொடங்கி 4.30 மணி வரை நடைபெற்ற எம்பிஏ தேர்வில் 333 பேர் கலந்துகொண்டனர்.
தேர்வுப் பணிகளை அண்ணா பல்கலைக் கழக தேர்வு ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரகாந்தி தலைமையில், கல்லூரி முதல்வர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு கண்காணித்தனர்.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்இ, எம்டெக்கிற்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் வசதிக்காக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையங்களிலிருந்து அரசுப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com