குடிநீர் பிரச்னையைப் போக்க ரூ.21 கோடியில் பணிகள்: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்க ரூ.21.57 கோடியில் ஊரக மற்றும் நகர் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைப் போக்க ரூ.21.57 கோடியில் ஊரக மற்றும் நகர் பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 ஊரக மற்றும் நகர்ப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் பிரச்னைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியளர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது: மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.18.07 கோடியில் 699 பணிகளும், பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.1.98 கோடியில் 135 பணிகளும், நகராட்சி பகுதிகளில் ரூ.1.52 கோடி மதிப்பில் 91 பணிகளும் என மொத்தம் 925 பணிகள் ரூ.21.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
 குடிநீர் பணிகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் முடிக்கவும், குடிநீர் சீராக வழங்கவும் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி இணைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com