கிளியனூர் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்

திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டிவனம் அருகே உள்ள கிளியனூர் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 கிளியனூர் திரெüபதியம்மன், கூத்தாண்டவர் கோயில் திருவிழா மே 10-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கெங்கையம்மன், மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல், அரக்குமாளிகை உற்சவம், பக்காசூரனை சம்ஹாரம் செய்தல், அம்மன் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, தீ மிதி திருவிழா, கூத்தாண்டவர் சுவாமிக்கு தாலிகட்டுதல், சிரசு வீதி உலாவும் நடைபெற்றது.
 புதன்கிழமை (மே 17) காலை 9 மணிக்கு, கூத்தாண்டவர் தேர்த் திருவிழா நடைபெற்றது. வானூர் சட்டப் பேரவை உறுப்பினர் சக்கரபாணி தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
 முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.
 முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் அறிவழகன், வீரமுத்து, அழகேசன், கதிரவன், சிவக்குமார், பிரபு உள்ளிட்ட அதிமுகவினரும், பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அழிகளம் நோக்கிச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. பின்பு தர்மர் பட்டாபிஷேகம், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com