சேந்தநாடு திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநாடு திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநாடு திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பழைமை வாய்ந்த இந்தக் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12-ஆம் தேதி விழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருக்கல்யாணம் 12-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது.
 முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெற்றது. திரௌபதி அம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தின்போது சேந்தநாடு, தொப்பையான்குளம், வானம்பட்டு, மட்டிகை, ஒல்லியாம்பாளையம், ஆண்டிக்குழி, களத்தூர் உள்பட
 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மே 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சியும், மே 20-ஆம் தேதி காலை 6 மணிக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் இரவு வேளையில் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வாண வேடிக்கை முழங்க வீதியுலா நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com