அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள்

ஏ.கே.டி. அகாதெமி பள்ளி
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வெழுதிய 965 மாணவர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில்
490-க்கு மேல் 31 பேரும், 480-க்கு மேல் 117 பேரும், 460-க்கு மேல் 301 பேரும், 450-க்கு மேல் 367 பேரும், 400-க்கு மேல் 632 பேரும் பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில் 25 பேரும், அறிவியலில் 19 பேரும், சமூக அறிவியலில் 124 பேரும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். மேலும், தமிழில் 100க்கு 99 மதிப்பெண்கள் 9 பேரும், ஆங்கிலத்தில் 10 பேரும் 100-99 மதிப்பெண்கள் பெற்றனர்.
மாணவர்களை பள்ளித் தாளாளர் ஏ.கே.டி.மகேந்திரன், செயலாளர் லஷ்மி ப்ரியா மகேந்திரன் முதல்வர் கெச்.இப்ராஹீம் ஷெரிப், துணை முதல்வர்கள் இரா.ஜோதிலிங்கம், தே, சுமதி, இரா.மோகன்குமார், க.வெங்கட்ராமன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மவுண்ட் பார்க் பள்ளி
தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நிர்வாகிகள் பாராட்டினர்.
இந்தப் பள்ளியில் தேர்வெழுதிய 592 மாணவர்களில் 486 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ச.அழகரசன் 496 மதிப்பெண்களும் ஆர்.அரவிந்த், இ.ஆஷிகா, டி.சக்தி சின்கா, எஸ்.கிஷோர் ஆகியோர் தலா 495 மதிப்பெண்களும் ஷகினா ரகமத்துனிஷா, ஆர்.பிரியதர்ஷினி, பி.கேமவிஜய், கே.காயத்ரி, என்.கரீஷ், பி.ராஜேஷ், என்.கௌதம் ஆகிய 7 பேர் தலா 494 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.  கணிதப் பாடத்தில் 23 பேரும், அறிவியலில் 38 பேரும், சமூக அறிவியலில் 110 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளியின் தாளாளர் ரா. மணிமாறன் பாராட்டி பரிசு வழங்கினார்.
பள்ளி முதல்வர் வி.கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்
குமார் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.

சக்தி மெட்ரிக். பள்ளி
சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியவர்களில் எஸ்.திவ்யதர்ஷினி 496 மதிப்பெண்களும் எஸ்.சிந்து 494 மதிப்பெண்களும் ஆர்.ஐஸ்வர்யா, எஸ்.சபரிநாதன் ஆகியோர் தலா 492 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
கணிதப் பாடத்தில் 12 பேரும், அறிவியலில் 11 பேரும், சமூக அறிவியலில் 24 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 99 மதிப்பெண்கள் மூவரும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களை இருவரும் பெற்றுள்ளனர். 80 மாணவர்கள் 450க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளியின் தாளாளர் இ.சி.இரவிக்குமார், செயலாளர் சாந்தி இரவிக்குமார், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com