கூட்டுறவு சிக்கன, நாணயச் சங்க ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மண்டலத் தலைவரும், திருவாரூர் மாவட்டச் செயலருமான எம்.சங்கர் தலைமை வகித்தார்.
விழுப்புரம் மாவட்டச் செயலர் ம.தேவேந்திரன் வரவேற்றார். மண்டலச் செயலர் அ.தாஸ் முன்னிலை
வகித்தார்.
மாநில பொதுச் செயலர் பா.சம்பத், மாநில பிரசார செயலர் கடலூர் எஸ்.பரமாத்மா, நாகை மாவட்டச் செயலர் எஸ்.கண்ணன், மாநில இணைச் செயலர் தஞ்சை எஸ்.கார்த்திகேயன், திருவாரூர் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயகாந்தன், கடலூர் மாவட்டத் தலைவர் டி.செல்வராஜ், நாகை மாவட்டப் பொருளாளர் வி.சரவணன், மகளிரணி செயலர்கள் கீதா, கவிதா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வலியுறுத்திப்
பேசினர்.
கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க ஊழியர்களுக்கு 2010- ஊதிய ஆணையில் அறிவிக்கப்பட்டபடி அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப் படிகள் குறைக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் தாற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாணையில் அறிவித்தபடி சங்க லாபத்தில் 10 சதவீதம் பணியாளர் நிதியாக ஒதுக்கீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகை மாவட்ட சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். மாதவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com