தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளிலும் வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கிராம ஊராட்சிகளைப் போல, பேரூராட்சிப் பகுதிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பு

கிராம ஊராட்சிகளைப் போல, பேரூராட்சிப் பகுதிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பு விவசாயத் தொழிலாளர்கள் அமைப்பு சார்பில் பேரூராட்சி அலுவலகங்கள் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி  தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமரன், ஒன்றியச் செயலாளர் வி.கிருஷ்ணராஜ் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சித்ரா, செயலர் உ.பிரேமா, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வி.அர்ச்சுனன், என்.குமார் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
பேரூராட்சி பகுதிகளிலும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, இதுகுறித்த 2,000 மனுக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டன.
வளவனூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் பி.மணிவாசகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கண்ணப்பன், கே.சுந்தரமூர்த்தி, வட்டச் செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பின்னர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் 1,500 மனுக்கள் கொடுத்தனர்.
உளுந்தூர்பேட்டையிலும்... உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் நகரச் செயலாளர் க.தங்கராசு தலைமை வகித்தார்.
ஒன்றிய-நகர நிர்வாகிகள் பி.சேகர், பி.ஸ்டாலின், ஜெ.ஐயப்பன், வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு எம்.ஆறுமுகம், டி.எம்.ஜெயசங்கர், மாவட்டக்குழு ஜெ.ஜெயக்குமார், எம்.கே.பழனி, அலுவலகச் செயலாளர் கே.வீரமணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உள்பட
100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரூராட்சிக்குள்பட்ட மக்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும்,
தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதே போல தியாகதுருகம் உள்ளிட்ட பேரூராட்சி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com