விவசாயிகளுக்கு வண்டல் மண் வழங்கும் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் விவசாய நிலங்களுக்காக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் விவசாய நிலங்களுக்காக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி கிராம ஏரியிலிருந்து வண்டல் மண் எடுக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
தமிழகத்தில் 2016-வடகிழக்கு பருவமழை தவறியதால் வறட்சி நிலவுகிறது. இதனால் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மழைநீரை சேமிக்க புதிய நீர் ஆதாரங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நீர் நிலைகளை புனரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 101 ஏரிகளில் ரூ.8.08 கோடி மதிப்பில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, விவசாயிகள் விளைநிலங்களை செம்மைப் படுத்தும் பொருட்டு கிராமங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள், அணைகளை தூர்வாரி வண்டல் மண் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன்படி நன்செய் நிலத்துக்கு, ஏக்கருக்கு 75 கனமீட்டரும் (25 டிராக்டர் லோடுகள்), புன்செய் நிலத்துக்கு ஏக்கருக்கு 30 லோடுகள், வீட்டு பயன்பாட்டுக்கு 10 லோடுகள், மண்பாண்டம் தொழில் செய்பவர்களுக்கு 20 லோடுகள் அளவுக்கு வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
விவசாய நிலங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக, விவசாயிகள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் மனு செய்து அனுமதி பெற்று மண் எடுத்து பயன் பெறலாம் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், எம்பி வெ.ஏழுமலை, வானூர் எம்எல்ஏ எம்.சக்கரபாணி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவிபொறியாளர்ஞானசேகர், கோட்டாட்சியர் ஜீனத்பானு, வட்டாட்சியர் பத்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com