வானூரில் வேளாண் விரிவாக்க மையம் திறப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியில் ரூ. 1.50 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
வானூர் வட்டத்துக்கு உள்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில், வானூர் வட்டாரத்தில் உள்ள வேளாண் துறை அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று, அரசுக்கு நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா புதிய கட்டடம் கட்டமைக்க உத்தரவிட்டார். தமிழக அரசு நிதி ஒதுக்கி ரூ. 1.50 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்துக்கான கட்டடப்பணி நடைபெற்று முடிந்தது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம், புதிய வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம், வானூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையில் உள்ள புதிய கட்டட அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், செயற்பொறியாளர் சுதாகர், துணை இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர்கள் ஜெகநாதன், துரைசாமி, ஆத்மா திட்ட அதிகாரி நரசிம்மன், அதிமுக நிர்வாகிகள் சதிஷ்குமார், குமார், கோவிந்தன், காமராஜ், வீரமுத்து, வேளாண் துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, வேளாண்துறை சார்ந்த அலுவலகங்கள், இந்த விரிவாக்க மையங்களில் செயல்பட உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com