புதை சாக்கடை இணைப்பு பெறாவிட்டால் நடவடிக்கை: விழுப்புரம் நகராட்சி அறிவிப்பு

விழுப்புரத்தில் புதை சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனே இணைப்பை பெற்றுக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் புதை சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் உடனே இணைப்பை பெற்றுக் கொள்ளவேண்டும். தவறும்பட்சத்தில் வீடுகளின் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அறிவித்துள்ளது.
 இது குறித்து, நகராட்சி ஆணையர் செந்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளைத் தவிர மீதமுள்ள நகரப் பகுதியான 33 வார்டுகளிலும், புதைவழி சாக்கடைத் திட்டம் கடந்த 26.6.2015 முதல் கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது.
 புதை சாக்கடைத் திட்டத்தின் கீழ் நகரில் உள்ள வீடுகளுக்கு உடனடியாக புதை சாக்கடை இணைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
 கடைகள், குடியிருப்பு வாசிகள் திரவ கழிவுகளை மழை நீர் வடிகால் வாய்க்கால்களில் விடுவது சட்டப்படி குற்றமாகும்.
 புதை சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் நகராட்சியை அணுகி, 5 நாள்களுக்குள் உரிய வைப்புத் தொகை செலுத்தி இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.
 தவறினால், வீடுகள், கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பகுதிகளை கண்டறிந்து அடைக்கப்படுவதோடு, நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும்.
 புதை சாக்கடைத் திட்டத்துக்கு குடியிருப்பு வாசிகள் தவணை முறையிலும் வைப்புத் தொகையை செலுத்தலாம்.
 கட்டடத்தின் பரப்பு 500 சதுரஅடிக்கும் குறைவாக இருந்தால், மூன்று தவணைகளாக தலா ரூ.1,000 வீதம் செலுத்தலாம். 500 முதல் 1200 சதுரஅடி கட்டட உள்ளவர்கள் தலா ரூ.1,500 வீதம் இரு தவணைகளும், மூன்று தவணையாக ரூ.2,000மும் செலுத்தலாம். 1200 சதுரஅடி முதல் 2,400 சதுரஅடி உள்ள கட்டடதாரர்கள் இரு தவணைகளாக தலா ரூ.2,000 வீதமும், மூன்றாவது தவணை ரூ.3,000மும் கட்ட வேண்டும்.
 2,400 சதுரஅடிக்கு மேல் உள்ள கட்டடதாரர்கள் முதல் இரு தவணைகள் தலா ரூ.3000 வீதமும், மூன்றாம் தவணையாக ரூ.4,000 மும் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com